ADDED : ஜன 08, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசு வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டுக்கான காமராஜர் விருதுக்கு, 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் காங்., கட்சியை சேர்ந்த தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினமான 15ம் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில், இந்த விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கஉள்ளார்.
விருது தொகையாக 2 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

