'தாட்கோ' நிதி முறைகேடு போலீசில் புகார் தர அனுமதி
'தாட்கோ' நிதி முறைகேடு போலீசில் புகார் தர அனுமதி
ADDED : ஏப் 11, 2026 04:37 AM
சென்னை: தேர்தல் நேரத்தில், பட்டியலின மற்றும் பழங்குடியின வாக்காளர்களை குறிவைத்து, ஆதி திராவிடர் நலத்துறையின், 'தாட்கோ' திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக, மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.செல்வகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 'முறைகேடு நடந்திருப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம். அதை அவர்கள் பரிசீலனை செய்வர். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
'நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதை நிரூபிக்க, எந்த ஆதாரங்களும் இல்லை' என தெரிவித்தது.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், 'தாட்கோ' நிதி தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாரளிக்க, மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
