நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏவுக்கு தடை
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏவுக்கு தடை
ADDED : மே 12, 2026 12:50 PM

நமது நிருபர்
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்துார் எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் 83,364; த.வெ.க., வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 ஓட்டுகள் பெற்றனர். சீனிவாச சேதுபதி, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில், சீனிவாச சேதுபதி, 17வது சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று (மே 12) சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.
திருப்பத்துார் எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நாளை நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, செந்தில் குமார் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைக்கால உத்தரவை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.
