ADDED : ஜன 04, 2026 02:43 AM

தமிழக பா.ஜ.,வில் அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல், சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.,வுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், அந்தக் கட்சியும் சேர்ந்து தோல்வியடையும். அதனால் தான், கூட்டணிக்காக கூவி கூவி அழைக்கும் நிலைக்கு தமிழக பா.ஜ., தள்ளப்பட்டுள்ளது. அவர்களோடு த.வெ.க., தலைவர் விஜய் கூட்டணி வைக்க மாட்டார்.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான 'இண்டி' கூட்டணி, தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., தற்போது கடைசி தேர்தலை சந்திக்க உள்ளது. அக்கட்சியின் கடைசி பொதுச்செயலராக பழனிசாமி இருக்கிறார். தமிழக அரசியலில், அ.தி.மு.க., இடத்தை நிரப்பும் கட்சியாக, த.வெ.க., மாறிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., படங்களை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த செங்கோட்டையன், தற்போது, விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை விசில் அடித்து பார்க்கட்டும்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி., - காங்.,

