ADDED : ஜன 31, 2026 06:42 AM
தமிழகத்தில் மாவட்ட காங்., தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, கட்சி வளர்ச்சி பணிகள் துவங்கியுள்ளன.
காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை, மத்திய பா.ஜ., அரசு மாற்றியதை நாடு முழுதும் கண்டிக்கின்றனர். ஆனால், பெயர் மாற்றத்தையும், திட்டத்தை மாற்றியதையும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வரவேற்பது கண்டனத்துக்குரியது. ஏழை களின் உண்மை நிலையை அறியாமல் அவர் பேசுகிறார்.
தமிழகத்தில் காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூட்டணி தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் கார்கே, ராகுல் போன்றோர் மட்டுமே பேச வேண்டும். தேவையற்ற சர்ச்சை பேச்சுகளை தவிர்க்குமாறு காங்., தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் தான், கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது என கூறுகிறேன்.
- நிவேதித் ஆல்வா
மேலிட பொறுப்பாளர், தமிழக காங்கிரஸ்
