sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெற்றோர் எதிர்பார்த்த 'வித்யாரம்பம்' 'அ'னா.. 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

/

பெற்றோர் எதிர்பார்த்த 'வித்யாரம்பம்' 'அ'னா.. 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

பெற்றோர் எதிர்பார்த்த 'வித்யாரம்பம்' 'அ'னா.. 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

பெற்றோர் எதிர்பார்த்த 'வித்யாரம்பம்' 'அ'னா.. 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்


ADDED : அக் 01, 2025 07:57 AM

Google News

ADDED : அக் 01, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் வேலம்மாள், 'நியூ ஜென் கிட்ஸ்' இணைந்து வழங்கும், 'அரிச்சுவடி ஆரம்பம்' என்ற குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சி, சென்னையின் முக்கிய இடங்களில் நாளை நடக்க உள்ளது.

விஜயதசமி நன்னாளில், நெல் மணிகளின் மீது குழந்தைகளின் கையால், 'அ'கரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது நம் பாரம்பரியம். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுநர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, 'அ'கரம் எழுதி 'வித்யாரம்பம்' செய்ய உள்ளனர்.

சென்னை படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வட பழனி ஆண்டவர் கோவில், கேளம்பாக்கம் வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பேட்டை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் என ஐந்து இடங்களில், நாளை காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்கனவே முன் பதிவு செய்தவர்கள், நாளை காலை 8:00 மணிக்கு நிகழ்விடத்திற்கு, குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.

இதில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'டி - ஷர்ட்' உடன், 'லேர்னிங் கிட்' மற்றும் குழந்தை அரிச்சவடி எழுதம் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், விபரங் களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியின் சேனல் பார்ட்னர், 'தமிழ் ஜனம்' தொலைக்காட்சி.






      Dinamalar
      Follow us