141 பேருக்கு 6.36 ஏக்கர் நிலம் பூமிதான வாரியம் முடிவு
141 பேருக்கு 6.36 ஏக்கர் நிலம் பூமிதான வாரியம் முடிவு
ADDED : ஜூன் 11, 2025 11:06 PM
சென்னை:வீட்டுமனைக்காக, 141 பேருக்கு, 6.36 ஏக்கர் நிலம் வழங்க, பூமிதான வாரியம் தீர்மானித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில், பூமிதான வாரிய கூட்டம், அதன் தலைவரும், கைத்தறித் துறை அமைச்சருமான காந்தி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில், 1,755 பேருக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட, 35 ஏக்கர்; கோவை மாவட்டத்தில், மூன்று பேருக்கு விவசாய பயன்பாட்டிற்காக, 3 ஏக்கர், பூமிதான நிலங்களில் மறு வினியோக பத்திரம் வழங்கப்பட உள்ளது.
பூமிதான சட்டப்படி, 141 பேருக்கு வீட்டு மனைக்காக, 6.36 ஏக்கர் பூமிதான நிலம் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி நான்கு இடங்களில் அரசின் தேவைக்காக, 4.71 ஏக்கர் பூமிதான நிலத்தை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், வருவாய்த்துறை கூடுதல் செயலர் பத்மா, நில சீர்திருத்த ஆணையர் ஹரிஹரன், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் மதுசூதனன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.