தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு

அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு

அன்று நான் போட்ட வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுது' : தி.மு.க., மீது விஜய் தாக்கு


UPDATED : பிப் 14, 2026 12:03 AM

ADDED : பிப் 13, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2026 12:03 AM ADDED : பிப் 13, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : 'விக்கிரவாண்டி மாநாட்டில், நம் கூட்டணிக்கு வந்தால், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வழங்குவேன்' என நான் போட்ட வெடிகுண்டு, இன்று பல கூட்டணிக்குள் தாறுமாறாக வெடித்து சிதறுகிறது. 'தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்து வராது' என ஸ்டாலின் ரொம்பவும் பதறுகிறார். அவரை பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு தான் கூட்டணி; மற்ற எல்லாத்துக்கும் அவர்கள் தனி அணி. 'வெல்வோம் ஒன்றாக' என்பார். ஆனால், வரும் 'வெல்த்' எல்லாம் பார்ப்போம் தனியாக என்பார். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும்,'' என, சேலம் கூட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் சரமாரியாக தி.மு.க.,வை தாக்கினார். சேலத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:

நான் அரசியலுக்கு வந்தது தவறா? பிற கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி, பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், எனக்கு மட்டும் அனுமதி இல்லை. கூட்டம் நடத்துவதற்கான, எஸ்.ஓ.பி., எனப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் எனக்கு மட்டுமே; அது, 'ஸ்டாலின் சார் ஆப்பரேட்டிங் புரொசிஜர்' ஆக இருக்கிறது.

ஒழிய வேண்டும்


எதிர்க்கட்சியினரின் கூட்டணி கணக்குகளும், பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவதும் இனி நடக்காது. ஓட்டுக்கு 5,000 ரூபாய் என வண்டி வண்டியாக பணத்தைக் கொட்டி, சுவாமி மேல் சத்தியம் வாங்குவர். இந்த கலாசாரம் ஒழிய வேண்டும்.

ஆனால், அவர்கள் கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, அவர்களின் காதிலேயே விசிலை ஊதுங்கள். தி.மு.க.,வின் ஊழல் ஆட்சியை, மக்கள் குப்பையில் துாக்கி போடுவர்.

வீட்டில் இருக்கும் கு ழந்தைகள் எல்லாரும், எனக்காக பிரசாரம் செய்ய வேண்டும். எனக்கு அரசியலில் அனுபவம் இல்லை என அழுகின்றனர். அதிகாரத்தை வைத்து, கொள்ளையடித்து கொம்பு முளைத்த அனுபவம் தான், அவர் களுக்கு இருக்கிறது.

நமக்கு கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை; அதை செய்யவும் மாட்டோம். நேரடி சரண்டர்; மறைமுக சரண்டராகும் அனுபவம் இல்லை.

நல்லாட்சி கொடுக்க, மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் போதும். அடுத்தவர் துவங்கிய கட்சியில் இருப்பவர்களால், என்னை போல் சொந்தமாக கட்சி துவங்கி, 1 சதவீத ஓட்டு வாங்கும் அளவுக்கு தில்லும் திராணியும் இருக்கிறதா.

தனித்து 30 சதவீதத்தை தாண்டி, செல்வாக்குடன் த.வெ.க., இருக்கிறது. ஆட்சி முடியும் நிலையில், 'உங்கள் கனவை சொல்லுங்கள்; அதை நிறைவேற்றுகிறேன்' என ஸ்டாலின் சொல்கிறார்.

இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, துாய சக்தியான த.வெ.க.,வை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது தான், மக்களின் கனவாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, வேலைவாய்ப்பு என மொத்த ஆட்சியும், 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆகத்தான் உள்ளது. ஆட்சிக்கு வரும் போதும், போகும்போதும் பொய்யாக சொல்கிறார்.

மக்கள் சந்தோஷமாக இருந்தால், ஏன் இவ்வளவு போராட்டங்கள் நடக்கின்றன. சாலை, குடிநீர், மருத்துவமனை என அடிப்படை வசதிகள் சரியாக இல்லை.

முதல் வேலை



போதை கலாசாரம் கட்டுக்குள் இல்லாமல், தாறுமாறாக ஓடுகிறது; வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. 'ஆக்டிங்' அதிகாரிகளை வைத்து அரசு நடத்தினால், இப்படி தான் நடக்கும்.

முதலில் நிரந்தர டி.ஜி.பி.,யை நியமியுங்கள் ஸ்டாலின் சார். ஒரு டி.என்.பி.எஸ்.சி., தேர்வை கூட நடத்த முடியாதவர்கள், உலக நாடுகளுடன் போட்டி போடுவதாக சொல்கின்றனர் .

நாம் ஆட்சிக்கு வந்தால், மக்களின் அடிப்படைகளை செய்து கொடுப்பது தான், நம் முதல் வேலையாக இருக்கும்.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை வாக்குறுதிகளாக கொடுக்க மாட்டேன். ஆட்சிக்கு வந்த பின், 'அவர்கள் அது தரவில்லை; இது தரவில்லை' என பம்மிக் கொண்டு இருக்க மாட்டேன்.

துாங்க விடாது



மக்களுக்காக எந்த எல்லைக்கும் போய் போராடுவேன். மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்து, நான் ஏன் பேச வேண்டும்? விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போட்டி தான் இந்த தேர்தல். இதற்கு இடையில் யாருமே இல்லை. என் போர் முழக்கம், ஸ்டாலினை ஒரு நிமிடங்கூட துாங்க விடாது.

விக்கிரவாண்டி மாநாட்டில், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என நான் போட்ட அரசியல் குண்டு, இப்போது எல்லா கூட்டணிக்குள்ளும் தாறுமாறாக வெடிக்கிறது. 'தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்து வராது' என ஸ்டாலின் தான் ரொம்பவும் பதறுகிறார்.

அவரை பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு தான் கூட்டணி; மற்ற எல்லாத்துக்கும் அவர்கள் தனி அணி. 'வெல்வோம் ஒன்றாக' என்பார். ஆனால், வரும் 'வெல்த்' எல்லாம் பார்ப்போம் தனியாக என்பார். புரிய வேண்டியவர் களுக்கு இது புரியும். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., - அ.தி.மு.க.,வை தவிர்த்த விஜய் சமீப காலமாக, அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என விஜய் விமர்சனம் செய்து வந்தார்; அதேபோல், பா.ஜ., கொள்கை எதிரி என சொல்லி வந்தார்; 'மோடிஜிக்கு தமிழகம் என்றாலே அலர்ஜி என விமர்சனம் செய்தார். ஆனால், சேலம் கூட்டத்தில், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., பெயரை கூட விஜய் உச்சரிக்கவில்லை. எனக்கு தி.மு.க., தான் எதிரி; மற்றவர்கள் குறித்து பேச வேண்டியதில்லை என கூறி தவிர்த்து விட்டார்.



'என்னால் தான் ரூ.5,000 கிடைத்தது' த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை: புதிதாக கோடைக்கால சிறப்புத் தொகையாக, 2,000 ரூபாயை திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான், கோடைக்காலம் வருகிறதா. வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, 13ம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? இதற்கெல்லாம் காரணம், வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான்.தி.மு.க., தனக்கு போட்டியாக கருதுவதும் த.வெ.க.,வை தான் என்பதை, இந்த அறிவிப்பு வழியே முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். என் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த உரிமைத் தொகையை, சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us