ADDED : ஜன 22, 2024 06:29 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே இருட்டூரணியிலுள்ள ஊருணியில் குளிக்க சென்ற சகோதாரர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகினர்.
இருட்டூரணியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் வழுதுார் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்கிறார்.
இவரது மகன்கள் தருண்பாலா 10, சாருகேஷ் 8. இருவரும் அங்குள்ள பள்ளியில் முறையே 5ம் வகுப்பு, 3ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் அங்குள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனர்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
கரையில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் இருவரும் இறந்ததாக தெரிவித்தார். அண்ணன், தம்பி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.-
ஆம்புலன்ஸ் வரவில்லை
சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிராமத்தினர் இருவரையும் மீட்டு ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் 108 க்கு தெரிவித்தனர். மிகவும் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததால் இருவர் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.