ADDED : மார் 18, 2024 01:40 AM

கொடைக்கானல்: திண்டுக்கல மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது.
மலைப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி உள்ளன. சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி பலனிக்கவில்லை.
பெருமாள்மலை, தோகைவரை வனப்பகுதி, வருவாய் நிலத்தில் நேற்று மாலை காட்டுத் தீ எரிந்தப் போதும் வனத்துறை பல குழுக்களாக இரவு, பகலாக தீ அணைக்க போராடுகின்றனர்.
வனப்பகுதியில் பரவும் காட்டுத் தீயால் வனவிலங்கு, மரங்கள் தீக்கிரையாகி சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது. வன விலங்குகள் மலையடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்களில் தஞ்சமடைந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதால் மனித, வன விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
வேடசந்துார் வடமதுரை ரோடு,- நத்தம் செங்குளம், கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட தோணிமலை, முட்டுக்கோம்பை வன பகுதிகளிலும் காட்டுத்தீ எரிந்தது.

