ரோட்டில் கவிழ்ந்த பஸ் தீப்பிடித்தது; பயணிகள் 20 பேர் காயம்
ரோட்டில் கவிழ்ந்த பஸ் தீப்பிடித்தது; பயணிகள் 20 பேர் காயம்
ADDED : நவ 09, 2024 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. திடீரென பஸ்சில் தீப்பிடித்த நிலையில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று பைக் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆம்னி பஸ் கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எரியத் துவங்கிய நிலையில், உள்ளே இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக மீட்கப்பட்டனர்.
பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.