ADDED : அக் 27, 2025 12:41 AM
தி.மு.க., ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில், 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. உண்மையில் கடந்த, 4 ஆண்டுகளில் 4.80 கோடி டன் நெல் விளைவிக்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும், தி.மு.க., அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இது சாதனையா, வேதனையா.
கடந்த 2023 - 24ம் ஆண்டில், நாட்டில் மொத்தம் 5,245 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் பங்கு வெறும் 4.52 சதவீதம் மட்டும் தான்.
அதேநேரம் பஞ்சாப் 23.62; தெலுங்கானா 12.15; சத்தீஸ்கர் 15.80; ஒடிஷாவில் 9.17 சதவீதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, போதிய அளவு நெல் கொள்முதல் செய்யாமல், தி.மு.க., அரசு துரோகம் செய்கிறது என்பதற்கு, இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை.
விவசாயிகளுக்கு ஒரு குவி ண்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாய் ஆதார விலை தருவது தி.மு.க., அரசு அல்ல. மத்திய அரசு 2,369 -ரூபாய் வழங்குகிறது. தி.மு.க., அரசு 131 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
- அன்புமணி,
தலைவர், பா.ம.க.,

