அ.தி.மு.க., - பா.ஜ.,வால் முதல்வருக்கு நிம்மதி போச்சு!
அ.தி.மு.க., - பா.ஜ.,வால் முதல்வருக்கு நிம்மதி போச்சு!
ADDED : மே 02, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு என அனைத்தும் உயர்ந்துள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்படி தி.மு.க., ஆட்சியால் படாதபாடு படும் மக்கள், இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
அதற்குத்தான், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி அமைந்ததில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் கத்துகிறார்; கதறுகிறார்; மன நிம்மதியில்லாமல் பிதற்றுகிறார்.
தி.மு.க., யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அது குறித்து அ.தி.மு.க., கவலை கொள்வதில்லை. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அ.தி.மு.க., ஆட்சியும், ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு தி.மு.க., ஆட்சியும் உதாரணமாக உள்ளன.
- ஜெயராமன்,
தேர்தல் பிரிவு செயலர்,
அ.தி.மு.க.,