பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு நடுக்கம்: அ.தி.மு.க.,
பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு நடுக்கம்: அ.தி.மு.க.,
ADDED : ஏப் 28, 2025 05:34 AM

சென்னை : கட்சி நிகழ்ச்சி ஒன்றில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்வீர்களா என பழனிசாமியை கேட்கச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி என்றதும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நடுக்கத்தின் விளைவுதான், இப்படிபட்ட கேள்வியெல்லாம்.
பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தால் அது புண்ணியமாம். அதே நாங்கள் வைத்தால் அது பாவமாம். பழனிசாமியின் தேர்தல் வியூகம் என்னவென்று அறியாமல் புலம்பிய தி.மு.க.,வுக்கு சவுக்கடி கொடுப்பது போல பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, முதல் வெற்றியை அ.தி.மு.க., பெற்றிருக்கிறது.
![]() |
தமிழகத்தில் தி.மு.க.,வை வெல்வதற்கு ஆளே இல்லை. இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டியே என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என அறிவித்த வினாடியில் இருந்து, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா... தனித்த ஆட்சியா என கேட்க வைத்துள்ளனர்.
ஆக, இரண்டாம் என்ற நிலையில் இருந்து மாறி, தற்போது தனித்த ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என பேச வைத்து விட்டது, பழனிசாமி வியூகம். இவ்வாறு அவர் பேசினார்.


