ADDED : மார் 20, 2026 05:27 AM
துாத்துக்குடி மாணவி கொலை வழக்கில், குற்றவாளியை கைது செய்திருப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது. இதில், பல கேள்விகள் எழுகின்றன. 2020ல் எட்டையபுரம் அருகே, மூதாட்டியை வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், 2022ல் இதே நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், 2024 ஆகஸ்டில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேல்முறையீட்டில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்கும் அளவுக்கு, தி.மு.க., அரசு அந்த வழக்கை மெத்தனமாக கையாண்டு இருக்கிறது. பல வழக்குகள் உடைய ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி, ஜாமினில் வெளிவரும் போது, அவனை தொடர்ந்து கண்காணிக்காமல், தமிழக காவல் துறை இருந்திருக்கிறது. இதற்கு, காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். -
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்
