ADDED : ஆக 26, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் 36,000 கோவில்கள் மட்டுமே உள்ளன; 6000 கோவில்கள் அழிந்து விட்டன. இதுபோல, 5.25 லட்சம் ஏக்கராக இருந்த கோவில் நிலம், 4.50 லட்சம் ஏக்கராகி விட்டது. கோவில்களில் ஆண்டுக்கு 18,000 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்; வெறும் 52 கோடி ரூபாய் மட்டுமே வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலினுக்கு, விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் கொடுக்க அனுமதி கேட்டோம்; இதுவரை கிடைக்கவில்லை. பிற மதங்களின் விழாக்களுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று, கொழுக்கட்டை சாப்பிட வேண்டும்.
- செந்தில்குமார், மாநில செயலர், ஹிந்து முன்னணி