ADDED : ஜன 08, 2026 01:26 AM

தி.மு.க., அரசும், மாவட்ட நிர்வாகமும் முறையாக செயல்பட்டிருந்தால், திருப்பரங்குன்றம் பிரச்னை பூதாகரமாகி இருக்காது. குறிப்பிட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என, 100 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனியாவது பக்தர்கள் தீபம் ஏற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்; திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னைக்காக உயிரை மாய்த்த பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், முருக பக்தர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் முருகன் கோவில் இடிக்கப்படுவதை தட்டிக்கேட்ட ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை, போலீசார் தாக்கியுள்ளனர்; இதை கண்டிக்கிறேன்.
- முருகன் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,

