ADDED : ஏப் 19, 2025 07:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நீட்' தேர்வு மசோதாவை, லோக்சபாவில் கொண்டுவரும் போது, நாமக்கல்லை சேர்ந்தவர் தான், தி.மு.க.,வின் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அப்போது, அவர் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள் ஏன், மசோதாவை எதிர்க்கவில்லை. நடக்காது என்று தெரிந்தும், மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது தி.மு.க.,
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., இதுவரை சந்திக்காத அளவிலான தோல்வியை சந்திக்கும்.
மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட, பா.ஜ., இரட்டை இன்ஜின் ஆட்சி நடத்தும் மாநிலங்கள், வளர்ச்சி பாதையை நோக்கி செல்கின்றன. காரணம், மத்திய அரசுடன், எந்த மோதலும் இல்லை. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறார். இதனால், பாதிப்பது தமிழகத்தின் வளர்ச்சி.
முருகன், மத்திய இணை அமைச்சர்

