ADDED : மே 16, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் பண்ணை வீடுகளில் வசிக்கும் மக்களை கொலை செய்து, கொள்ளை அடிப்பது வழக்கமாக உள்ளது. நெல்லை அருகே காங்., மாவட்ட தலைவர் கொலை, திருப்பூர், சென்னிமலை, சிவகிரியில் நடந்த முதியோர் கொலை சம்பவங்களில் ஒரு துளி கூட ஆதாரத்தை கண்டறியவில்லை.
தமிழக அரசால் முடியாதென்றால், சி.பி.ஐ., விசாரணைக்கு விட்டிருக்கலாம். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியால், 140 கோடி இந்தியர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம், இந்திய மக்களுக்கு, இனி வரும் காலம் நல்ல காலமாக அமையும்.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்பதை, சிந்துார் வெற்றி காட்டுகிறது. இந்தியா வல்லரசாக அறிவிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.
-வாசன்,
தலைவர், த.மா.கா.,