ADDED : ஜூன் 10, 2025 06:25 AM

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், போதுமான ஆசிரியர் நியமனம், சிறந்த கட்டமைப்பு ஆகியவற்றை தி.மு.க., அரசு செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாகவே உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவ ஆணையம், இந்த குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்து, இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை, ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்பதும், அதற்கு மழுப்பலாக அரசு தரப்பில் பதில் அளிப்பதும், வாடிக்கையாக உள்ளது.
தமிழக அரசின் உறுதிமொழி அடிப்படையில், அங்கீகாரம் ரத்து செய்யப்படாவிட்டாலும், கூடுதல் இடங்களுக்கு ஒப்புதல் தர, தேசிய மருத்துவ ஆணையம் மறுத்து வருகிறது.
அதன்படி, புதிதாக துவங்கிய 10 மருத்துவக் கல்லுாரிகளில், தலா 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை கூடுதலாக ஏற்படுத்தும் கோரிக்கையை, தேசிய மருத்துவ ஆணையம் மறுத்து விட்டது. தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கால், 500 பேரின் மருத்துவ கனவு சிதைந்து விட்டது.
-பன்னீர் செல்வம்
முன்னாள் முதல்வர்