ADDED : நவ 11, 2024 06:37 AM

தமிழகத்தில் இதுவரை நடந்த மாநாடுகளில், தே.மு.தி.க., நடத்திய மாநாட்டில், சரித்திர சாதனை செய்தவர் விஜயகாந்த். எந்த கட்சியும் அப்படியொரு மாநாடு நடத்தவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன், 40 தொகுதிகளிலும் வென்று விட்டோம் என, தமிழக முதல்வர் அறிவித்தார். தற்போது, 2026 சட்டசபை தேர்தல் துவங்கும் முன், 200 தொகுதிகளில் வெல்வோம் எனக் கூறி, மக்களை மூளைச் சலவை செய்கின்றனர்.
அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட, அதிக நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும். அதற்கான பணிகளை துவக்கி விட்டோம்; வியூகத்தை கூடிய விரைவில் அமைப்போம்.
தி.மு.க., கூட்டணியில் பல குளறுபடிகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். வரும் தேர்தல் வரை, அந்த கூட்டணி நீடிக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க., வாடகை ஆட்சி நடத்தி வருகிறது. மழை வந்தால் படகுகளையும், பஸ்களையும் வாடகைக்கு எடுக்கிறது. எனவே, இந்த அரசை வாடகை அரசாகத்தான் பார்க்கிறோம்.
-பிரேமலதா
தே.மு.தி.க., பொதுச்செயலர்