ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும்: உதயநிதி
ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும்: உதயநிதி
ADDED : பிப் 10, 2025 06:12 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் தி.மு.க., நிர்வாகி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக முதல்வர் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மகளிர்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்கப்பெறும் என்று சட்டசபையில் உறுதி அளித்துள்ளேன். அது நிறைவேற்றப்படும். மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை. தமிழகம் பெயர் கூட இடம் பெறவில்லை. அதனால் பா.ஜ.,வுக்கும், அக்கட்சிக்கும் ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க.,விற்கும் பாடம் கற்பிக்கும் வகையில் கடந்த லோக்சபா தேர்தல் போல வரும் 2026 தேர்தலிலும் இரு கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டுவர். தி.மு.க., கூட்டணியே மிகப் பெரிய வெற்றி பெறும்.
இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்பார்; ஏழாவது முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

