sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்'

/

'தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்'

'தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்'

'தமிழகத்தை இனி நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க., தான்'

12


ADDED : ஜூன் 27, 2025 07:23 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 07:23 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: ''தமிழகத்தை இனிமேல் தி.மு.க., தான் நிரந்தரமாக ஆட்சி செய்யும் இறுமாப்புடன் இதை கூறுகிறேன்,'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருப்பத்துார் அடுத்த மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 273.83 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, ஒரு லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் மக்களை பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகின்றனர். இது தான் அவர்களுடைய அரசியல்.

மதவாத அரசியல்

'மிஸ்டு கால்' கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை, 'மிஸ் யூஸ்' செய்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை, இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்.

தமிழகம், ஈ.வெ.ராமசாமி உருவாக்கிய மண், அண்ணாதுரை வளர்த்த மண், கருணாநிதி மீட்ட மண். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமையோடும், பிற மதத்தினரோடும், நல்லிணக்கத்தோடும் வாழும் மண்.

கடந்த நான்கு ஆண்டில் தமிழகத்தில் 3,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்ச், மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் நம் தி.மு.க., அரசு.

இதை எல்லாம் பார்த்து தான், மதவாத அரசியல் செய்கிறவர்களுக்கு பற்றி எரிகிறது. அவர்களால் தமிழகத்திற்கு செய்த வளர்ச்சியை பற்றி பேச முடியவில்லை; மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. செய்திருந்தால் தானே சொல்ல முடியும்.

அடமானம்

தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண்.

இப்படிபட்ட தலைவர்களை, நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணாதுரை பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.

அண்ணாதுரை பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு தமிழகத்தை அடமானம் வைக்க அனுமதிக்கக்கூடாது.

தன்மானமுள்ள தமிழக மக்கள், இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போவது தி.மு.க.,வே.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கும்!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருப்பதால், அந்த கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க., அமைதியாக இருக்கிறது; பா.ஜ., சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அ.தி.மு.க.,வை விழுங்குவது தான் பா.ஜ.,வின் திட்டம்.முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இப்படிபட்டவர்களுடன் அ.தி.மு.க., எப்படி பயணிக்க முடியும்? எனவே, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பயணிப்பது தற்கொலைக்கு சமமானது.நடிகர் கமல் தி.மு.க.,வுடன் வந்து விட்டார். அவரின் துவக்க அரசியல் பேச்சுக்கும், இப்போது பேசுவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன.மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து வீடியோ வெளியானது குறித்து, நடிகர் விஜய் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா.,வை விமர்சித்த பின்னும் அமைதி காக்கும் விஜய், உண்மையிலேயே அவரை உள்வாங்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us