14 திட்டத்திற்கு நிதியில்லை மூட்டை கட்டியது குடிநீர் வாரியம்
14 திட்டத்திற்கு நிதியில்லை மூட்டை கட்டியது குடிநீர் வாரியம்
ADDED : மே 15, 2025 11:51 PM
சென்னை:பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்த உள்ள, 14 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நிதி கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக புதிதாக, 25 கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்தால், 1.37 கோடி பேருக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வாய்ப்பு உருவாகும்.
இதற்கிடையே, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் நாமக்கல், திண்டுக்கல் உட்பட, 14 கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக, நான்கு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு திட்ட மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து, ஓராண்டுக்கு மேலாகிறது. இப்பணிக்கு மொத்தமாக, 16,875 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கான நிதியை அரசு வழங்கவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களிடம் நிதி பெறும் முயற்சியும் இன்னும் கைகூடவில்லை. அதனால், 14 கூட்டுக்குடிநீர் திட்ட அறிக்கையை, தமிழக குடிநீர் வாரியம் மூட்டைக்கட்டி வைத்து உள்ளது.