sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்வாரியம் மாய்மாலமும்; இளிச்சவாயான மக்களும்!

/

மின்வாரியம் மாய்மாலமும்; இளிச்சவாயான மக்களும்!

மின்வாரியம் மாய்மாலமும்; இளிச்சவாயான மக்களும்!

மின்வாரியம் மாய்மாலமும்; இளிச்சவாயான மக்களும்!

26


UPDATED : மார் 23, 2026 02:33 PM

ADDED : மார் 23, 2026 07:32 AM

Google News

26

UPDATED : மார் 23, 2026 02:33 PM ADDED : மார் 23, 2026 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 'மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும்' என்ற அறிவிப்பு, 2021 - 22 சட்டசபையில் மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியிடப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படவில்லை.

வீடுகளில் மாதந்தோறும் மின் பயன்பாடும், கணக்கெடுப்பும் நடைமுறைக்கு வரவில்லை. இதேபோல், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், சட்டசபையில், மின் துறை சார்பில், பல்வேறு அறிவிப்புகளை, துறை அமைச்சர்கள் வெளியிட்டனர். அவற்றில் முக்கிய அறிவிப்புகளாக இருந்து, இதுவரை செயல்பாட்டிற்கு வராதவற்றின் விபரம்.

* மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும்

* வீடுகளில் மாதந்தோறும் மின் பயன்பாடும், கணக்கெடுப்பும் நடைபெறும்

* அபரிமிதமான சூரியசக்தியின் அடிப்படையில், சூரியசக்தி மின்சார பூங்கா, மாவட்டந்தோறும் நிறுவப்படும்

* எண்ணுாரில், 2,000 மெகாவாட் அளவிற்கு, சிறிய அளவிலான, 18 மெகாவாட் முதல், 20 மெகாவாட் வரை, எரிவாயு மின் திட்டங்கள் அமைக்கப்படும்

* பல்வேறு மாவட்டங்களில், 7,500 மெகாவாட் நிறுவு திறனில், 11 நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும்

* உடன்குடி விரிவாக்க மின் நிலையம், 660 மெகாவாட் திறனில், தலா இரு அலகுகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* தமிழகம் முழுதும், 2,000 மெகாவாட் சூரியசக்தி மின்சார பூங்கா நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

* அரசு - தனியார் பங்களிப்புடன், 5,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப்படும்

* மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, தேவைக்கு ஏற்ப நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

* துாத்துக்குடியில், 600 மெகா வாட் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்






      Dinamalar
      Follow us