சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
ADDED : ஏப் 19, 2025 11:15 AM

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்: சினிமாவில் வன்முறைகளை காட்டுவதை மாணவர்கள் உள்வாங்கிக்கொள்கின்றனர். சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும். சினிமா மோகத்தில் இன்றைய இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களை திருத்த முடியாது.
சிவாஜி கணேசன் எப்பேர்ப்பட்ட நடிகர். அவர் அரசியலில் பெரிதாக வளர முடியவில்லை. நடிப்பை தான் மக்கள் பார்க்கின்றனரே தவிர, அரசியலுக்கு வந்தால் எடுபடாது. சினிமாவும் அரசியலும் எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் எடுபட்டது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான். சினிமாவால் கிடைத்த புகழ் வெளிச்சத்தை அரசியலுக்கு பயன்படுத்தி, ஜெயித்தவர்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ஆரும் தான். மற்ற எந்த நடிகர்கள் துவங்கிய கட்சியும் பெருசா எடுபடலை.
இதை நம்ம ஊர் நடிகர்கள் உணராமல் இருப்பது தான் ஏன் என்கிற டவுட் வருகிறது.''சினிமா செல்வாக்கு அரசியலில் எடுபடாது என்பதை நம்ம ஊர் நடிகர்கள் இன்னும் உணராமல் இருப்பது ஏன் என்கிற சந்தேகம் எழுகிறது,

