வசூல் ராஜா மின் அதிகாரிகள் வசமாக சிக்கினர்; போர்மேன் ரூ.ஆயிரம்; அதிகாரிக்கு ரூ.3 ஆயிரம்!
வசூல் ராஜா மின் அதிகாரிகள் வசமாக சிக்கினர்; போர்மேன் ரூ.ஆயிரம்; அதிகாரிக்கு ரூ.3 ஆயிரம்!
ADDED : நவ 21, 2024 01:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலத்தில் லஞ்சம் வாங்கிய மின் அலுவலக வணிக ஆய்வாளர், போர்மேன் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளராக மணி பணியாற்றி வந்தார். இவர் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றுள்ளார். புகார் படி, ரூ.3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின் அலுவலக வணிக ஆய்வாளர் மணி என்பவர் கைதாகினார்.
ரூ.1,000 லஞ்சம் பெற்ற போர்மேன் ராதாகிருஷ்ணன் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். இது குறித்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.