ADDED : ஆக 17, 2025 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், கம்யூனிஸ்ட்டுகளும் வெளியில் தான் வாய் பேசுகின்றனர். ஆனால், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்குள் அடங்கி கிடக்கின்றனர். திருமாவளவன், அறிவாலயத்துக்குள் கும்பிடு போட்டு, 'பா.ஜ., வந்துவிடக் கூடாது' என்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. துாய்மை பணியாளர் மீது உண்மையிலேயே கம்யூனிஸ்ட்டுகளுக்கும், திருமாவளவனுக்கும் அக்கறை இருந்தால், 'துாய்மை பணியாளர்களிடம் கருணையோடு நடந்து கொள்ளாவிட்டால், தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறுவோம்' என கூற வேண்டும். அப்போது தான், அவர்களை மக்கள் நம்புவர். -தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.