ADDED : மார் 05, 2024 05:44 AM

தி.மு.க., ஆட்சி அமைத்ததும், அரசு டாக்டர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் கோரிக்கைகளை நிறைவேறவில்லை.
கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு கருணை காட்டவில்லை. அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து, ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவுப்படியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354ன் படியும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவது போல், டாக்டர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
- எஸ்.பெருமாள்பிள்ளை
தலைவர், அரசு டாக்டர்களுக்கான போராட்டக்குழு.

