'எப் அண்டு ஓ., வர்த்தகத்தை நிறுத்த அரசு விரும்பவில்லை'
'எப் அண்டு ஓ., வர்த்தகத்தை நிறுத்த அரசு விரும்பவில்லை'
ADDED : நவ 07, 2025 06:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ங்குச் சந்தைகளில் எப் அண்டு ஓ., வர்த்தகத்தை நிறுத்துவதற்கு அரசு விரும்பவில்லை என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில், எஸ்.பி.ஐ.,யின் வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
முன்பேரக வர்த்தகத்தின் வாயிலை அடைக்க அரசு ஒருபோதும் விரும்பவில்லை; மாறாக, இதில் உள்ள சிக்கல்களை நீக்கி, வர்த்தகத்தை மேலும் எளிதாக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.
எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் உள்ள ரிஸ்க்குகளை புரிந்துகொள்வது முதலீட்டாளர்களின் பொறுப்பு. அதேநேரம், நிதிச் சந்தை குறித்து ஒவ்வொரு கிராமங்களிலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

