பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்; கனிமொழி பதில்
ADDED : நவ 07, 2025 04:58 PM

தூத்துக்குடி: 'பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும்' என கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்தார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி அளித்த பதில்: நிச்சயமாக ஆண் ஆக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில், இந்த விஷயங்களில் அந்தப் பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும்.
முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். மிக விரைவில் தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்க முடியும். நடவடிக்கை எடுத்ததற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

