கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு
கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு
ADDED : ஜூலை 01, 2025 04:07 AM
சென்னை : 'சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய, 1.30 லட்சம் விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க, அரசு 297 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது' என, சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, 2021ம் ஆண்டு முதல், கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 'முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, 2025 - 26ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், 2024 - 24ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு 349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 297 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுஉள்ளது.
இதன் வாயிலாக, 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய, 1.30 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில், ஊக்கத்தொகை நேரடியாக செலுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.