ADDED : மார் 20, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லியின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மெட்ரோவின் 4ம் கட்ட விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், திட்டத்தை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். விதிகளின்படி மரக்கன்றுகள் நடுவதை மேற்கொள்ளும்படி டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்னை குறித்தும் விவாதித்தோம்.
பங்கஜ் குமார் சிங்,
போக்குவரத்து அமைச்சர்

