மாநில அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் கவர்னர் நடக்க வேண்டும்
மாநில அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் கவர்னர் நடக்க வேண்டும்
ADDED : பிப் 05, 2025 07:19 PM
பார்லிமென்டில் அவை மரபுகள் குறித்து பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடிக்கு, பா.ஜ., ஆளாத மாநிலங்களின் சட்டசபை மரபுகளை, கவர்னர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா ? தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும், கவர்னர் ரவி, தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. கவர்னரோடு முரண்பட்டபோதிலும், சபை நாகரிகம் கருதி, முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு மதிப்பளித்து, சட்டசபையில் உரையாற்ற, சபாநாயகர் வழியே அழைப்பு விடுத்தார்.
ஆனால், நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என, கேட்கும் அளவு நடந்து கொள்ளும், கவர்னர் ரவி சபை மாண்பை மதிக்காமல், உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சட்டப்படி, மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையைதான் கவர்னர் வாசிக்க வேண்டும். அதைத்தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசுக்கு கட்டுப்பட்டு, கவர்னர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை, பிரதமர் மோடியே ஒப்புக் கொள்கிறார். கவர்னர் ரவி இனி என்ன சொல்லப் போகிறார்.
ரகுபதி, தமிழக சட்ட அமைச்சர்