ADDED : ஜன 31, 2024 02:10 AM
நான்கரை ஆண்டுகளாக, ஊழல் ஆட்சி செய்த அ.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள், கவர்னர் புண்ணியத்தில் சிறைக்கு செல்லாமல் உள்ளனர்.
'இண்டியா' கூட்டணி துண்டு துண்டாக சிதறும். இறுதியில் தி.மு.க., மட்டும் தான் மிச்சமிருக்கும். .
தேர்தலில் என்னைப் போட்டியிடச் சொல்லி தொண்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
அ.தி.மு.க.,வில் இருக்கும் 'ஸ்லீப்பர் செல்'கள், மொத்த இயக்கத்தையும் கூடவே இருந்து கவனிக்கின்றனர். அவர்கள் வெளியே வரும்போது, கட்சி குறித்த பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். அதனால், ஓட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை. பழனிச்சாமி கடை விரித்துள்ளார். ஆனால், வாங்குவதற்கு யாரும் இல்லை. தமிழக கவர்னர் செயல்பாடு, அவருடைய பதவியின் அந்தஸ்துக்கு ஏற்றதாக இல்லை. கவர்னருக்குரிய அதிகார எல்லையை கடந்து அவர் செயல்படக்கூடாது.
- தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,