அ.தி.மு.க.,வில் நேர்காணல் வரும் 10ம் தேதி துவக்கம்
அ.தி.மு.க.,வில் நேர்காணல் வரும் 10ம் தேதி துவக்கம்
ADDED : மார் 07, 2024 11:31 AM
சென்னை:லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., 21 முதல் மார்ச் 1 வரை, விருப்ப மனு பெறப்படும் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.
பொதுத் தொகுதிக்கு விண்ணப்பிக்க 20,000, தனி தொகுதிக்கு 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
மார்ச் 1க்கு பின், மேலும் ஐந்து நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் விருப்ப மனு சமர்ப்பிக்க கடைசி நாள். மொத்தம் 2,500 விருப்ப மனுக்கள் வந்தன.
விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வரும் 10 மற்றும் 11ம் தேதி நடக்க உள்ளது.
நாளை மறுதினம் காலை 9:30 மணிக்கு, திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.
பகல், 2:00 மணிக்கு, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை; 11ம் தேதி காலை 9:30 மணிக்கு, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கும்.
அன்று பகல் 2:00 மணிக்கு, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கு, நேர்காணல் நடக்க உள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரியும், பொதுச்செயலர் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், நேர்காணலில் பங்கேற்கலாம் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்து உள்ளது.

