ADDED : மார் 14, 2024 10:41 PM

நெல்லை மேலப்பாளையத்தை சேர்த்த கூலி தொழிலாளியான வரதராஜ பெருமாள் என்பவர் கடந்த 02-03-2024-ம் தேதியன்று, சாலையில் கிடந்ததாக ரூபாய் 12,400 பணத்தை தன்னுடைய வறுமை நிலையிலும், மற்றவரின் பொருளின் மேல் ஆசைப்படாமல் நேர்மையுடன் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
பணத்தை தவற விட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு செய்தி வெளியிடப்பட்டும், இதுநாள் வரையிலும் யாரும் உரிமை கோரப்படாத நிலையில் இன்று 14-03-2024 ம் தேதி வரதராஜ பெருமாள் என்பவரை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து மேற்படி பணத்தை என்ன செய்யலாம் என்று அவரிடமே கேட்டபோது சற்றும் யோசிக்காமல் எதாவது அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்திற்கு அளித்து அவர்களில் ஒரு வேலை பசியை போக்கலாம் என்றார்.
அவரின் நேர்மையையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாத நல்ல குணத்தை பாராட்டும் விதமாக நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்கள் வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.
குறிப்பு : பணத்தை தவற விட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகுமாறு நெல்லை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

