sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்

/

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்


ADDED : ஜன 24, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருக பெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம், ஹிந்து மக்களின், குறிப்பாக, தமிழர்களின் முக்கிய தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலம் இருக்கும் மலையானது, அகநானுாற்றில், 'முருகன் குன்றம்' என்று அழைக்கப்படுகிறது.

இங்கு முருக பெருமான், தெய்வானையை திருமணம் செய்து கொண்டதால்தான், முருகன் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் என, நம் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக் காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில், இதன் சிறப்பை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

ஆலய வழிபாடு


பல நுாற்றாண்டுகளாக, நம் முன்னோர் வழிபட்டு வருகிற, இத்திருத்தலத்தில் சைவ சமய சான்றோர்களான, சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர், ஆலய வழிபாடு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை வந்தபோது, 'அந்த திருப்பரங்குன்றம் மலை முழுதுமே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமானது' என, லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பு கூறிஉள்ளது.

அதன் அடிப்படையில், காலம்காலமாக மலை மேல் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

மதுரையை துருக்கியர்கள் கைப்பற்றி, ஹிந்துக்களை கொன்று குவித்து, மன்னன் திருப்பாண்டியனை சூழ்ச்சியால் வென்ற பிறகு, மீண்டும் பாண்டிய மன்னன், தன் நாட்டை மீட்க, படைகளை திரட்டி போரிட்டு, சிக்கந்தர் பாதுஷா தலைமையிலான முகமதியர்களை வென்றெடுத்தான்.

சிக்கந்தர் ஷா, திருப்பரங்குன்றத்தில் பதுங்கியிருந்த போது, திருப்பாண்டியனின் படைகளால் கொல்லப்பட்டு, அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட இடத்தை தான், பிற்காலத்தில், சிக்கந்தர் தர்கா என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர், இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர்.

சிக்கந்தர் ஷாவின் சமாதியை, வழிபாட்டுத் தலமாக மாற்றி, இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடி வந்தாலும், பெருந்தன்மையோடு உள்ளூர் மக்கள், வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததாலேயே, தற்போதைய ஆக்கிரமிப்பு நிலை தொடர்கிறது.

தடை விதிப்பு


இங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், 1967ஆம் ஆண்டு வரை, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

பின், இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக, மலை உச்சி கோவிலில், கார்த்திகை தீபத் துாணில் தீபம் ஏற்ற, அரசால் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ஹிந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மலை உச்சியில் கார்த்திகை மாதத்தில் தீபத்துாணில், தீபம் ஏற்ற அனுமதி பெற்றனர்.

இருந்தாலும், சட்டம் -ஒழுங்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, உரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்து வருவது, சட்டவிரோதமானது.

இதன் பிறகும், ஹிந்து சமய அறநிலையத்துறை, தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது.

தீபத்துாணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, இந்து முன்னணியும், ஹிந்துக்களும், பலமுறை போராட்டம் நடத்தியும், அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது.

இந்நிலையில் எந்த உரிமையும் இல்லாத முஸ்லிம் அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்றும், அந்த மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி வெட்டி கந்துாரி செய்வோம் என, திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.

போராட்டம்


அதற்காக கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி, பொதுமக்கள் மத்தியில் வன்முறையைத் துாண்டும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டிய அரசு, தன் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர் மீது உறுதியாக, நேர்மையாக நடவடிக்கை எடுக்காமல் மென்று முழுங்கிக் கொண்டிருக்கிறது.

தீபத்துாணில் தீபம் ஏற்ற ஹிந்துக்களுக்கு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தும், அதை பின்பற்றாமல் தடை விதிக்கும் காவல் துறையும், தமிழக அரசும், சட்டவிரோதமாக உரிமை கோரும் இஸ்லாமிய அமைப்புகளிடம், உங்களுக்கு உரிமையில்லை என்று சொல்லி, நேர்மையாக நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்திற்கு சென்று, உரிமையை பெறும் உத்தரவை பெற்று வாருங்கள் என்று துாண்டி விடுவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எம்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்ட உறுப்பினர், ஒரு மதத்தினரின் சட்ட விரோத செயல்களுக்கு துணைபோவது, மத அடிப்படைவாதமே.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவரை, உடனடியாக கைது செய்திருக்க வேண்டிய காவல்துறை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படுவதற்கு காரணம், தி.மு.க., அரசின் மதவாதமே.

முற்றுப்புள்ளி


உடனடியாக திருப்பரங்குன்றம் முழுமையாக முருகன் கோவிலுக்கு சொந்தமானது மட்டுமே என்ற உண்மையை, சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

திருப்பரங்குன்றம் முழுதும் முருக பெருமானுக்கே சொந்தம் என்பதை, ஆவணங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தி, சட்ட விரோதமாக சொந்தம் கொண்டாடி நம் மதுரை தமிழ் மக்களை கொன்று குவித்து, அடிமைப்படுத்திய நபரை போற்றும் சட்டவிரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதோடு, நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உரிய இடத்தில் இனி தீபம் ஏற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us