தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/8 மணி நேரத்துக்கு பின்னர் பிடிபட்டது சிறுத்தை

8 மணி நேரத்துக்கு பின்னர் பிடிபட்டது சிறுத்தை

8 மணி நேரத்துக்கு பின்னர் பிடிபட்டது சிறுத்தை


ADDED : மே 25, 2024 09:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 09:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை 8 மணி நேரத்துக்கு பின் மயக்க ஊசி பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை அருகே உள்ள, செபாஸ்டின் வீட்டில் வீட்டில் இன்று, பகல் 12:00 மணிக்கு சிறுத்தை நுழைந்துள்ளது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த, இடும்பன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டினுள் இருந்த, அவரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. அதிர்ச்சியடைந்த இரும்பல் கதவை சாத்தி உயிர் தப்பினார். தகவல் இருந்து அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். வீட்டினுள் இருந்த சிறுத்தையின் சத்தம் கேட்டு அச்சமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் வன ஊழியர்கள், சிறுத்தை நிலை குறித்து ஆய்வு செய்தனர். வன ஊழியர்கள், சிறுத்தை வீட்டை விட்டு வெளியேறாத வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்பட்டதால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கு முன் ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், இது குறித்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர், தெங்குமரஹாட வனப்பகுதியில், இறந்த காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை பணிகளை முடித்துக் கொண்டு, இரவு சேமுண்டி பகுதிக்கு வந்து சேர்ந்தார்.

தொடர்ந்து சிறுத்தையின் உடல்நிலை ஆய்வு செய்த கால்நடை டாக்டர், இரவு 8:15 மணிக்கு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து, மயக்கம் அடைந்த சிறுத்தையை கால்நடை டாக்டர் ஆய்வு செய்தனர். அதனை கூண்டில் அடைத்து, அதனை வனத்தில் விடுவதற்காக,

முதுமலை வனப்பகுதிக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us