4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் கொடுத்தது வானிலை மையம்!
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் கொடுத்தது வானிலை மையம்!
ADDED : நவ 27, 2024 02:09 PM

சென்னை: 'கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,27) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாலை பெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளது.
இன்று (நவ.,27)
* கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
* சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபும், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவ.,28)
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* நவ.,29,30ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

