'எதில் தவறு நடந்தது என்பதை அமைச்சர் சொல்ல வேண்டும்!'
'எதில் தவறு நடந்தது என்பதை அமைச்சர் சொல்ல வேண்டும்!'
ADDED : பிப் 11, 2025 08:23 PM
அமைச்சர் காந்தி மேட்டருக்கு பாக்ஸ்:
பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக, கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது, பதில் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி, இந்தாண்டு கையும் களவுமாக மாட்டி கொண்டதும் நான்கு, ஐந்து பக்கங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்.
அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இத்தனை தர பரிசோதனைகளுக்கு பின் அனுப்பப்படும் நுாலில் நெய்யப்பட்ட வேட்டிகளில், எப்படி, 20 லட்சம் வேட்டிகளில், 65 சதவீதத்துக்கும் அதிகமாக பாலியஸ்டர் கலந்திருப்பதாக நிராகரிக்கப்பட்டன?
நுால் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை, காந்தி தெரிவிக்க வேண்டும். 'தரம் குறைவானவை என்று நிராகரிக்கப்பட்ட வேட்டிகளின் எண்ணிக்கைக்கு ஈடான வேட்டிகளை, அந்தந்த சங்கங்கள் அரசு கிடங்குகளுக்கு இம்மாதம், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்; இல்லையேல் இழப்பீடு நடவடிக்கை எடுப்பவதுடன் எதிர்காலத்தில் இந்த சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட மாட்டாது' என, கைத்தறி துறை இயக்குனர், இம்மாதம், 2ம் தேதியிட்ட குறிப்பாணையில் தெரிவித்திருக்கிறார்.
அவர் விதித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

