'கறுப்பு மாஸ்க்' அணிந்து பிரதமரை வழியனுப்பிய அமைச்சர்
'கறுப்பு மாஸ்க்' அணிந்து பிரதமரை வழியனுப்பிய அமைச்சர்
UPDATED : ஏப் 07, 2025 08:07 AM
ADDED : ஏப் 07, 2025 04:41 AM
அவனியாபுரம்: 'ராமேஸ்வரம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு டில்லி செல்ல மதுரை விமான நிலையம் வந்த பிரதமரை, தமிழக அரசின் சார்பில் வரவேற்ற அமைச்சர் தியாகராஜன் 'கறுப்பு மாஸ்க்' அணிந்து வரவேற்றார்.
ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று மதியம் திறந்து வைத்தபின், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 4:40 மணிக்கு வந்தார்.
பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர் பழனிவேல் ராஜன், கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்பட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 28 பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு மாலை 5:20 மணிக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் டில்லி புறப்பட்டார்.
அவருடன் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமரை வரவேற்ற அமைச்சர் தியாகராஜன் 'கறுப்பு மாஸ்க்' அணிந்துஇருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பாக அவரது வீட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் தியாகராஜன் விருந்தளித்தார். அப்போது அவர் 'மாஸ்க்' எதுவும் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

