தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓரமாக ஒதுங்கி நின்ற அமைச்சரின் தந்தை

 ஓரமாக ஒதுங்கி நின்ற அமைச்சரின் தந்தை

 ஓரமாக ஒதுங்கி நின்ற அமைச்சரின் தந்தை


ADDED : மே 23, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அமைச்சரவையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்களாகி உள்ளனர். கவர்னர் மாளிகையில், நேற்று முன்தினம் 23 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவில், அதிகாரிகள் மும்முரமாக இருந்த போது, குழந்தையுடன் வந்த முதியவர், அங்கிருந்த செய்தித்துறை அதிகாரிகளிடம், 'இப்படி ஓரமாக நிற்கலாமா' என்று கேட்டார்.

அவரிடம் நீங்கள் யார் என அதிகாரிகள் கேட்டபோது, என் மகன் ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார். அதை காண வந்துள்ளேன் என்றார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவரை பதவியேற்பு விழா நடந்த அரங்கிற்கு அழைத்து சென்று அமர வைத்தனர். அவருடன் ரமேஷ் மனைவியும் எளிமையாக வந்திருந்தார். பல அமைச்சர்களின் குடும்பத்தினர், மிகவும் எளிமையாக விழாவிற்கு வந்திருப்பதை, அதிகாரிகள் ஆச்சரியமாக பார்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us