ADDED : பிப் 14, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, மின்சாரம் குறித்து பேசிய, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணி, ''சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தாயின் கருவறையில் இருந்து கல்லறை வரை, மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் என்றார். எத்தனை பேர் ஏற்றுக்கொள்வர் என்று தெரியவில்லை. நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை,'' என்றதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

