நத்தம் அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்
நத்தம் அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல்
ADDED : மார் 08, 2024 10:24 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதுாரில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய 10 பேர் கும்பலை போலீசார் சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் தேடி வருகின்றனர்.
மதுரை - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இச்சுங்கச்சாவடி பிப்.,8ல் திறக்கப்பட்டது. இதை திறந்த நாள் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வெளியாகின. இதை கண்டித்து நத்தத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் 27, கழிவுநீர் வாகனத்துடன் மதுரை சென்றார். சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டனர். நான் உள்ளூர்காரன் என்னிடமே கட்டணம் கேட்கிறாயா என அவர் கூற இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த லோகேஷ் நண்பர்கள் 10 பேரை அழைத்து வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டிகள் சேதமடைந்தன. வாகனங்கள் செல்லும் பாதையில் டூவீலர்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி போலீசார் சி.சி.,டிவி கேமரா பதிவுப்படி தேடுகின்றனர்.

