ADDED : டிச 13, 2024 07:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழையில் பெரிய பாதிப்பு இல்லை. எது வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. தென்காசிக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்; திருநெல்வேலிக்கு அமைச்சர் நேரு அனுப்பப்பட்டனர். திருச்சியில் மழை பெய்ததால், உடனே அவர் அங்கு சென்றார். இப்போது அவர் மீண்டும், திருநெல்வேலிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.
மத்திய அரசு கொடுத்த, பேரிடர் நிவாரண நிதி போதாது. இதுகுறித்து ஊடகங்கள் தொடர்ந்து எழுதி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மழை நிலவரம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டத்தை, பார்லிமென்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்.
- முதல்வர் ஸ்டாலின்.

