ADDED : பிப் 10, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலநிலை ஊருக்கு ஊர் மாறும். ஒரு சில இடங்களில் குளிர் இருக்கும். வேறு சில இடங்களில் வெப்பம் இருக்கும். அதேபோல, அரசியலிலும் தட்ப வெப்பம் உண்டு. அதற்கேற்ப அங்கெல்லாம் அரசியல் நடத்த வேண்டும்; நடத்தத் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தட்ப வெப்பம் தெரிந்துதான், டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து ஊர்களிலும் தாமரை மலரலாம்; ஆனால், அப்படியெல்லாம் செய்வரா எனத் தெரியாது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பிரதமர் மோடியாலும் முடியாது; அவர் சார்ந்திருக்கும் கட்சியினராலும் முடியாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் டிபாசிட்டும் போய், அதற்கான பணமும் பறிபோனதால், நாம் தமிழர் கட்சியினர் கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால், அக்கட்சியே ஒரு பொழுதுபோக்கு மன்றம்.
- துரைமுருகன், பொதுச்செயலர், தி.மு.க.,

