ADDED : டிச 12, 2024 08:37 PM
தேர்தல் களத்தில், தி.மு.க.,தான் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
எதிர் அணியில் இருப்பவர்கள், என்ன செய்வது என தெரியாமல், ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர் அணியினரை துவம்சம் செய்யும் அளவிற்கு தி.மு.க., சக்தியுன் உள்ளது.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே போதும். எதிர் அணியினர் தவிடு பொடியாகி விடுவர்.
பேரிடர் காலங்களில், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை. அதனால், தமிழக அரசு மற்ற திட்டங்களுக்காக வைத்திருக்கும் பணத்தை எடுத்து மக்களுக்கு செலவு செய்கிறது. அதனால், திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்க வேண்டி உள்ளது.
கடந்த 2021க்கு முன்பு வரை, தமிழகத்தின் மீது எதிர்மறையான எண்ணம் தான் உலகம் முழுதும் இருந்தது. ஆனால், இப்போது தமிழக அரசின் திட்டங்களை உலக நாடுகளே பின்பற்றத் துவங்கி உள்ளன.
ராஜா, தொழில் துறை அமைச்சர்

