sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

/

பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்

பத்தாம் வகுப்பில் 93.80 சதவீதம் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் அதிகம்


ADDED : மே 16, 2025 11:05 PM

Google News

ADDED : மே 16, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச், 28 முதல் ஏப்., 15 வரை நடந்தன. இதில், 4,930 உயர்நிலை, 7,555 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 12,485 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

அதாவது, 4 லட்சத்து, 35,119 மாணவியரும், 4 லட்சத்து, 36,120 மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களில், 4 லட்சத்து, 78 மாணவர்கள், 4 லட்சத்து, 17,183 மாணவியர் என, 8 லட்சத்து, 17,261 பேர் தேர்ச்சி பெற்று, 93.80 சதவீதத்தை பதிவு செய்துள்ளனர்.

இது, கடந்த ஆண்டை விட, 2.25 சதவீதம் அதிகம். வழக்கம் போல, மாணவர்களை விட மாணவியர், 4.14 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி அடைந்தவர்களில், ஆண்கள் பள்ளிகளை விட, பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளை சேர்ந்தவர்களே அதிகம். அரசு பள்ளிகளை விட, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள்


தமிழகத்தில், 12,290 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதியதில், 11,409 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 237 சிறைவாசிகளில், 230 பேர் தேர்ச்சி பெற்றனர். 23,769 தனித்தேர்வர்களில், 9,616 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.

கசக்கும் தமிழ்


பொதுவாக மொழிப்பாடங்களில், முழு மதிப்பெண் பெறுவது கடினம். இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில், 346 மாணவர்கள் ஆங்கில பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று உள்ள நிலையில், எட்டு மாணவர்கள் மட்டுமே, தமிழில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்தாண்டு முதல், தமிழ் பாடத்தில் உள்ள அலகுகள் குறைக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், தமிழில் பின்தங்குவது குறித்து, பள்ளிக் கல்வி துறை ஆராய வேண்டியது அவசியம்.

துணைத்தேர்வு


பத்தாம் வகுப்பு தேர்வில், 53,978 பேர் தேர்ச்சி பெறவில்லை; 15,652 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், வரும் ஜூலை 4ம் தேதி முதல் நடக்க உள்ள துணைத்தேர்வுகளை எழுதலாம்.

அதில் தேர்ச்சி பெற்று, இந்த கல்வியாண்டிலேயே பிளஸ் 1ல் சேரலாம். படித்த பள்ளி வாயிலாகவும், அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும், வரும், 22ம் தேதி முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு இன்போகிராபிக்ஸ் பகுதிக்கு@


தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்8,71,239 மாணவியர்4,35,119மாணவர்கள்4,36,120தேர்ச்சி பெற்றவர்கள்மாணவியர்4,17,183மாணவர்கள்4,00,078மொத்தம்8,17,261தேர்ச்சி சதவீதம்மொத்தம் 93.80மாணவியர் 95.88மாணவர்கள் 91.74தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுடன் ஒப்பீடு2023 - 24 91.552024 - 25 93.80முழு தேர்ச்சி100 சதவீத தேர்ச்சி பெற்ற மொத்த பள்ளிகள் / 4,917100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் / 1,867
பாடவாரியாக முழு தேர்ச்சி
பாடம்/ மாணவர்களின் எண்ணிக்கை/ தேர்ச்சி சதவீதம்
தமிழ் / 8 / 98.09
ஆங்கிலம்/ 346 / 99.46
கணிதம் / 1996 / 97.90
சமூக அறிவியல் / 10,256 / 98.49
தேர்ச்சி சதவீத அடிப்படையில் முதலிடம் பெற்ற 5 மாவட்டங்கள்மாவட்டம்/ தேர்ச்சி சதவீதம்
சிவகங்கை / 98.31
விருதுநகர் / 97.45
துாத்துக்குடி / 96.76
கன்னியாகுமரி / 96.66
திருச்சி / 96.61---
அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 5 மாவட்டங்கள்
சிவகங்கை / 97.49
விருதுநகர் / 95.57
கன்னியாகுமரி / 95.47
திருச்சி / 95.42
துாத்துக்குடி / 95.40---
மேலாண்மை வாரியாக தேர்ச்சிபள்ளிகள் / எண்ணிக்கை / 100 சதவீத தேர்ச்சி/ சதவீதம்
அரசு பள்ளிகள்/ 6,247 /1,867
உதவிபெறும் பள்ளிகள் / 1,808 /459
தனியார் / 4,430 / 2,591
மொத்தம்/ 12,485 / 4,917---
அரசு துறை பள்ளிகள் வாரியான முழு தேர்ச்சிபள்ளிகள்/ எண்ணிக்கை/ 100 சதவீத பள்ளிகள்
பள்ளிக்கல்வி / 5,627 / 1,666
ஆதிதிராவிடர் நலப்பள்ளி/ 206 / 97
மாநகராட்சி/ 139 / 27
வனத்துறை / 3 / 0
கள்ளர் சீர்திருத்தம்/ 60 / 22
நகராட்சி / 132 / 16
சமூகப் பாதுகாப்பு / 6 / 3
சமூக நலம் / 7 / 4
பழங்குடி நலம் / 67 / 32
மொத்தம் / 6247 / 1867
மாவட்ட வாரியாக 100 சதவீத தேர்ச்சி
மாவட்டம்/ பள்ளி எண்ணிக்கை/ 100 சதவீதம்
சிவகங்கை / 278 / 175
விருதுநகர் / 349 / 179
துாத்துக்குடி / 308 / 161
கன்னியாகுமரி / 435 / 236
திருச்சி / 445 / 210---
மாவட்ட வாரியாக பின்தங்கியுள்ள மாவட்டங்கள்
தரவரிசை/ மாவட்டம்/ பள்ளி எண்ணிக்கை/ 100 சதவீதம்
34 / திருவள்ளூர் / 225 / 26
35 / செங்கல்பட்டு/ 146 / 14
36 / கள்ளக்குறிச்சி / 146 / 11
37 / சென்னை / 161 / 17
38 /வேலுார் / 135 / 16
பாலின ரீதியிலான பள்ளி அளவில் 5 இடங்களில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
மாவட்டம் /ஆண்/பெண்/இருபாலர்/மொத்தம்/
கன்னியாகுரி /428 / 2345 / 18333 /21106
திருநெல்வேலி /1,541/ 4,329 /15,346/ 21,216
தென்காசி / 664 / 2487/ 14,238 /17,389
துாத்துக்குடி / 1,701 /4,120 /14,943 /20,764
ராமநாதபுரம் / 732/ 1,702 /12,619 /15,053



பிளஸ் 1 தேர்ச்சி இன்போகிராபிக்ஸ் பகுதிக்கு


மொத்த பங்கேற்பு
மாணவர்கள் 3,82,488
மாணவியர் 4,24,610
மொத்தம் 8,07,098
தேர்ச்சி பெற்றோர்
மாணவர்கள் 3,39,283
மாணவியர் 4,03,949
மொத்தம் 7,43,232
தேர்ச்சி சதவீதம்
மொத்தம் 92.09
மாணவர்கள் 88.70
மாணவியர் 95.13
மாணவியர் கூடுதல் சதவீதம் 6.43
கடந்தாண்டுடன் ஒப்பீடு 2023 - 24 2024 - 25
பங்கேற்றோர் 8,11,172 8,07,098
தேர்ச்சி பெற்றோர் 7,39,539 7,43,232
சதவீதம் 91.17, 92.09
முழுமதிப்பெண் பெற்ற பள்ளிகள்
மொத்த பள்ளிகள் 2,042
அரசு பள்ளிகள் 282
தேர்ச்சி சதவீதம்
அரசு பள்ளிகள் 87.34
உதவிபெறும் பள்ளிகள் 93.09
தனியார் சுயநிதி பள்ளிகள் 98.03
பாலின அடிப்படை பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
இருபாலர் பள்ளி 92.40
பெண்கள் பள்ளி 95.02
ஆண்கள் பள்ளி 83.66
ஆண்கள் பள்ளிகளைவிட பெண்கள் பள்ளி கூடுதல் 11.36
முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம்
அரியலுார் 97.76
ஈரோடு 96.97
விருதுநகர் 96.23
கோவை 95.77
துாத்துக்குடி 95.07
அரசு பள்ளி அளவில் முதல் 5 இடங்களை பெற்ற மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம்
அரியலுார் 96.94
ஈரோடு 95.37
நாகப்பட்டினம் 93.07
விருதுநகர் 92.07
சிவகங்கை 91.97
மேலாண்மை வாரியான பள்ளிகளின் 100 சதவீத தேர்ச்சி
மேலாண்மை மொத்தம் 100 சதவீத தேர்ச்சி
அரசு பள்ளிகள் 3,168 282
உதவிபெறும் பள்ளிகள் 1,218 220
தனியார் பள்ளிகள் 3,172 1,540
மொத்தம் 7,558 2,042
பாடம்/மாணவர்கள்/சதவீதம்
தமிழ் / 41
ஆங்கிலம் / 39
இயற்பியல் / 390
வேதியியல் / 593
உயிரியியல் / 91
கணிதம் / 1,338
தாவரவியல் / 4
விலங்கியல் / 2
கணினி அறிவியல் / 3,535
வரலாறு / 35
வணிகவியல் / 806
கணக்குப்பதிவியல் / 111
பொருளியல் / 254
கணிதப் பயன்பாடுகள் / 761
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் / 117--------
பாடவாரியாக தேர்ச்சிபாடப்பிரிவு/ சதவீதம்
அறிவியல் பிரிவுகள் / 95.08
வணிகவியல் பிரிவுகள் / 87.33
கலைப்பிரிவுகள் / 77.94
தொழில் பாடப்பிரிவுகள்/ 78.31



பிளஸ் 1 எழுதாத 11,025 பேர்


தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழத்தில், 11,025 மாணவர்கள் தேர்வெழுதாததால், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us