ADDED : ஜூலை 10, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மற்ற மாநிலங்களில், அரசு திட்டங்களை, மக்களிடம் ஆட்சியாளர்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால், தமிழக மக்களுக்கு மறதி அதிகம். தி.மு.க., செய்யக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் மறந்து விடுவர். அடுத்து என்ன பண்ணவில்லை என்பதைத்தான் கேள்வியாக கேட்பர். தமிழக மக்கள், படித்து பட்டம் பெற்றவர்களாக மாற வேண்டும் என நினைப்பது கேள்வி கேட்பதற்காகத்தான்.
வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தான், நம் வெற்றிக்கான முதல் படி என்பதை தி.மு.க.,வினர் நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.
- கனிமொழி,
எம்.பி., - தி.மு.க.,